வெள்ளி, 19 டிசம்பர், 2008

நாம் ஏன் இவற்றைச் செய்யக்கூடாது....


மலேசியத் தமிழர்கள் மொழி உணர்வும் இன உணர்வும் குன்றியிருக்கின்ற இக்காலக்கட்டத்தில் அடுத்த தலைமுறையினைத் தமிழ் தலைமுறையாக உருவாக்குகின்ற கடப்பாடு நம் அனைவருக்கும் உண்டு. ஆகவே, நாம் ஏன் இவற்றைச் செய்யக்கூடாது.


1.உங்கள் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுங்கள்
2.உங்கள் வீட்டுக்குத் தமிழில் பெயரிடுங்கள்
3.விழா நாள்களில் பண்பாட்டு உடை அணியுங்கள்
4.பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புங்கள்
5.நாள்தோறும் திருக்குறள் படியுங்கள்
6.திருக்குறள் தமிழ்மறை என்பதை எல்லாருக்கும் உணர்த்துங்கள்
7. நமது பண்பாட்டைப் பேணுவதில் கருத்தாய் இருங்கள்
8.ஒரு தமிழன் கெட்டுப் போனால் மட்டும் அந்நேரத்தில் தமிழனே இப்படித்தான் என்றும், அவன் சிறந்திருக்கும் வேளையில் இந்தியன் முன்னேறிவிட்டான் என்று கூறுவதை விட்டுவிட்டு, அவன் உயர்ந்து விளங்கும் போதும் தமிழன் என்றே கூறுங்கள்
9.தமிழிலே பேசுங்கள், தமிழிலே கையெழுத்திடுங்கள்
10. பிறமொழி கலவாமல் தமிழில் பேசுங்கள், எழுதுங்கள்
11.உங்கள் வீடுகளில் நூல்களைச் சேர்த்துப் படிக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள்
12.எல்லாரிடத்தும் புரிந்துணர்வோடு பழகுங்கள்
13.பிறரைப் பழிக்கும் அல்லது அழிக்கும் நோக்கம் கொள்ளாதீர்கள்
14.பிள்ளைகளை அன்பு செலுத்தியும் அதே போழ்து கண்டித்தும் கட்டுப்பாட்டோடு வளர்த்தெடுங்கள்
15.முதன்மையான ஒழுக்கத்தைப் பேணி, பிள்ளைகளுக்கும் கற்பியுங்கள்
16.அருவருக்கத் தக்கதும், பண்பாட்டைக் சீர் கெடுக்கும் கருத்துகளைக் கொண்ட திரைப்படங்களைப் பார்க்காதீர்கள்
17.சிக்கல்கள் நேர்ந்தால் பதற்றமடையாமல் ஆற அமர சிந்தித்து ஆராய்ந்து முடிவெடுங்கள்
18.பொருளற்ற ஐயப்பாடுகளையும் தவறான கற்பனைகளையும் உற்றவர்கள் மீது கொள்ளாதீர்கள்
19.அளவிறந்த சீற்றம் கொள்ளாதீர்கள்
20.மொழிமானத்தையும் இனமானத்தையும் உயிரெனப் போற்றுங்கள்
21.வீட்டில் குடும்ப உணர்வினைப் பேணுங்கள்
22.குடும்பத்தோடு சேர்ந்து உண்ணும் வழக்கத்தை மேற்கொள்ளுங்கள்
23.பிறரை மதிக்கவும், வணக்கம் சொல்லவும் பிள்ளைகளுக்குக் கற்பியுங்கள்
24.நம் இனத்தை இன்றளவும் சீர்கெடுத்துக் கொண்டிருக்கும் அடுத்துக் கெடுத்தல், புறம் பேசுதல், கோள் சொல்லுதல், காழ்ப்பு கொள்ளுதல், பொய்
பேசுதல் போன்ற ஒழுங்கீனங்களைக் கைகொள்ளாமலும் பிறருக்கும்
அந்நோய்களைப் பரப்பாமலும் வாழுங்கள்
25.நம்புங்கள், தமிழரால் முடிந்தால் தமிழால் முடியும்

நன்றி:- மலேசியத் தமிழ்நெறிக் கழகம்

3 கருத்துகள்:

தாய்மொழி சொன்னது…

தமிழ் மீது நாங்கள் கொள்ள வேண்டிய கடப்பாடு பற்றி தேய்வுற சுட்டி காட்டியதில் மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்..

கோவி.மதிவரன் சொன்னது…

தாய்மொழி,
தங்கள் கருத்துக்கு நன்றி.

பெயரில்லா சொன்னது…

நல்ல பதிவு.
ஐயா, ஓர் ஐயம்!
நம் திருமணமான தமிழ்ப்பெண்கள் நெற்றி/தலை வகிட்டில் குங்குமம் இடுகின்றனரே.. இதற்கு சமய விளக்கம் ஏதேனும் உண்டா? இந்த பழக்கம் ஏதோ அன்னிய / அண்மைய வரவாக உணர்கிறேன்.

அன்புடன்,
கபிலன்