புதன், 17 செப்டம்பர், 2008

தமிழ் ஆலயம் - வலையுலக அறிமுகம்


என் இனிய வலையுலகத் தமிழன்பர்களே,
வணக்கம். வாழ்க! தமிழ்நலம் சூழ்க!


  • தமிழ்மொழி, பண்பாடு, தமிழர் வாழ்வியல் கூறுகள் அனைத்தும் அடங்கிய தமிழ்த் தளமாக இவ்வலைத்தளத்தை அறிமுகம் செய்வதில் பெருமகிழ்வு எய்துகின்றேன்.

  • தமிழாலயம் மொழியின் வழியாகத் தமிழரை ஒன்றிணைக்கும் ஆலயமாக விளங்க வேண்டும் என்பதே நமது அவா.

  • தமிழ்நாடு அரசு தமிழைச் செம்மொழியாக அறிவிப்பு செய்த நாள் 17.09.2004.

  • தமிழ்மொழி வரலாற்றில் சிறப்புமிக்க அந்த அறிவிப்பு வெளிவந்து இன்றோடு (17.09.2008) நான்கு ஆண்டுகள் நிறைவுபெறுகிறது.

  • இந்த நன்னாளில் 'தமிழ் ஆலயம்' என்ற இவ்வலைப்பதிவைத் தமிழர் உள்ளங்களில் பதிவு செய்வதில் பெருமையடைகின்றேன்.
  • உலகத் தமிழன்பர் அனைவரின் உறவையும் உற்ற ஆதரவையும் நாடி இந்த அளவில் விடைபெறுகிறேன்.


இறுதியாக,
தமிழே தமிழரின் முகவரி அதுவே நமது உயிர்வரி!
தமிழா ஒன்றுபடு! தமிழால் ஒன்றுபடு! தமிழுக்காகவே ஒன்றுபடு!


அன்புடன்;
கோவி.மதிவரன்
தொல்லூர்(செலாமா) - வெள்ளி மாநிலம் - மலேசியா,
17.09.2008

1 கருத்து:

Sathis Kumar சொன்னது…

கோவியாரின் தமிழாலயம் கண்டேன்,
அதில் தமிழ் லயிக்கக் கண்டேன்,
பெருமுளமகிழ்வு கொண்டேன்,
திகட்டாக் கனித்தமிழ் உண்டேன்.

அன்பு கோவி.மதிவரன் அவர்களுக்கு,

தமிழ்க் காப்புப் பணிக்கென தாங்கள் தொடங்கியிருக்கும் தமிழ் வலைத்தளத்தில் பல அரிய விடயங்களைப் பகிர்ந்து வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி, தொடரட்டும் உங்கள் சேவை. :)

மலேசிய வலைப்பதிவர் குழுமத்தில் இணைய தங்களை அன்புடன் விழைகிறேன்.
http://groups.google.com/group/MalaysianTamilBloggers

நன்றி.