வியாழன், 22 ஏப்ரல், 2010

பூஜ்ஜியமா ? சுழியமா?

எதிர்வரும் இல் தொடங்கி அறிவியல் கணிதப் பாடங்கள் மீண்டும் தாய்மொழியிலேயே கற்பிக்கப் படவிருக்கின்றன. இந்த அரிய வாய்ப்பினை மலேசிய அரசு மீண்டும் வழங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும். ஆனால், தமிழ்மொழிக் காக்க வேண்டிய அரசு அதிகாரிகள் அப்பொறுப்பில் இருந்து கொண்டு மொழிக்கு இரண்டகம் செய்யும் போக்கு ஒட்டுமொத்த மலேசியத் தமிழர்களால் கண்டிக்கப்பட வேண்டியவையாகும்.

சுழியமா ? பூஜ்ஜியமா ? என்ற சிக்கல் தொடர்பான தனது கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையிலும் சுழியத்தை ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான அறிவான விளக்கங்களை வழங்கவும் இக்கட்டுரை எழுதப்படுகிறது.

சுழியம் நல்ல தமிழ்ச் சொல்லாகும். எனவே, தமிழைக் காக்க வேண்டிய அவசியம் கருதி இச்சொல்லை நாம் தமிழ்ப்பாட நூலில் இடம்பெறச் செய்தல் வேண்டும்.


சுழியம் அன்றாட வாழ்வில் மக்கள் பயன் படுத்தும் வழக்குச் சொல்லாகும். இன்று மாணவர்களும் பெரியோர்களும் பரவலாக இச்சொல்லைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆகவே இதனைப் பயன்படுத்துவதில் தாழ்வில்லை.


பிறந்த குழந்தையின் தலையைப் பார்த்து ஒற்றைச் சுழி, இரட்டைச்சுழி என்பது சாதாரண மக்கள் பேசுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. ஆக பெரும்பாலான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றை ஒதுக்குவது ஏன்?


தமிழில்சுழிஎழுத்துகள் நிரம்ப உள்ளன. .கா : இரண்டு சுழின்மூன்று சுழிஎன அழைக்கின்றோம்.


சுற்றி அடிக்கும் காற்றைச்சுழல் காற்றுஎன்று குறிப்பிடுகின்றோம்.


மேலே சொன்ன அனைத்துச் சூழலிலும்சுழிஎன்பது வளைவுக் கருத்தை வலியுறுத்துவதைக் காணலாம்.

சுழி என்பதோடுஅம்விகுதி சேர்ந்துசுழியம்என்ற சொல் உண்டானது.


0 என்ற எண்ணைக் குறிக்கும் சரியான தமிழ்ச்சொல்தான் சுழியம். இச்சொல் மிக எளிமையாக மாணவர்களுக்குப் புரியும். ஆகவே இது மாணவர்களுக்கு புரியாது விளங்காது என்பது அறிவீனம்.


ஒரு புள்ளியில் தொடங்கி சுழித்து வந்து அதே புள்ளியில் ‘0’ என்பதற்குச் சுழியம் மிகப் பொருத்தமான தமிழ்ச்சொல்லாகும். ஆகவே, நமது தாய்மொழியாம் தமிழை நாம் பயன்படுத்துவதிலும் காப்பதிலும் என்ன தவறு ?


நன்றி:- தமிழ் நேசன்