சனி, 7 பிப்ரவரி, 2009

எத்தனை நாளைக்கு ?

தமிழீழ வரலாற்றுச் சமரில் இன்றுவரை எமது தமிழின விடுதலைக்காக இன்னுயிரை ஈந்திருக்கின்ற வீர வேங்கைகளுக்கு எமது வீர வணக்கங்கள்

ஈழத்தமிழர்களைக் கொன்றொழிக்கும் முயற்சிக்கு பேருதவியாக இருந்துவரும் இந்திய நடுவணரசு இலங்கைக்கு அனுப்பும் இராணுவ உதவிகளை உடனடியாக நிறுத்தல் வேண்டும். எனவே, உலகத் தமிழர்கள் அனைவரும் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஈழத்தில் அல்லலுரும் நம் தொப்புள் கொடி உறவுகளுக்குத் தோள் கொடுப்போம். விரைவில் தமிழீழம் மலர இறைஞ்சுவோம்

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்









எத்தனை நாளைக்குச்
சொல்லுவாய் ?
இராசிவ் கொலையையே
குதப்பிநீ மெல்லுவாய்......
(எத்தனை)

கொத்துக் கொத்தாய் அங்கு
மக்கள் மடியவும்
கூக்குர லோட
பொழுது விடியவும்
மொத்தமாய் எம்இன
முளைகிள்ளப் பார்த்தும்
மூடனே..... காங்கிரசு
முட்டாளே நீ இன்னும்
(எத்தனை)

மலையரண் போல
மக்களைக் காத்தும்
மாப்பகையை அவர்
சாய்ப்பது பார்த்தும்
புலிபுலி என்றே
புழுதி கிளப்பிடும்
புண்ணாக்கே காங்கிரசுப்
புல்லனே .... நீ இன்னும் .......
(எத்தனை)

அமைதிப்படை செய்த
அழும்பில் எரிந்தும்
அக்காள் தங்கைகள்
அடியோடு சிதைந்தும்
குமைவோரின் பற்றுக்
கோடான புலிகளைக்
கோட்டானே...... காங்கிரசுக்
குக்கலே ...... நீ இன்னும்......
(எத்தனை)

"அன்னையே" தனது
அழுகையை நிறுத்தியும்
அவர்மகள் தன் துயர்
ஆற்றுப் படுத்தியும்
அண்ணணா .... தம்பியா.....
அழுதுநடிக் கின்ற
பன்னாடையே ...... காங்கிரசுப்
பதரே ..... நீ இன்னும்
( எத்தனை)



நன்றி : தமிழேந்தி








2 கருத்துகள்:

ஆதவன் சொன்னது…

ஈழப்போருக்கு உலக வலைப்பதிவர்கள் பலர் பெரும் ஆதரவாக இருந்து செயல்படுகின்ற வேளையில், எமது மலேசியத்தின் வலைப்பதிவர்களின் பங்களிப்பு சற்று குறைவாக இருக்கிறது.

இந்த நிலையில், தங்களின் வலைப்பதிவிலும் ஈழ ஆதரவுக் குரல் ஒலிப்பது கண்டு பெருமிதம் அடைகிறேன்.

ஈழத்துக்கு செய்யும் கடமையும் ஈன்றெடுத்த தாய்க்குச் செய்யும் கடமையும் வேறல்ல..!

பணி தொடர்க ஐயா...!

குமரன் மாரிமுத்து சொன்னது…

மனிதம் செத்துவிட்டதையா.. தமிழ் என்ற உணர்வு மட்டும் போதாது; தமிழர் என்ற உணர்வும் தலைவர்களுக்கு இருக்க வேண்டும். இவை இரண்டும் ஒருங்கே கொள்ளாதமையால்தான் இன்று ஈழப் பிரச்னைகளுக்கு தமிழ் நாட்டில் மட்டுமல்ல மலேசியாவிலும் தமிழ்த் தலைவர்கள் ஊமை பொம்மைகளாக இருக்கின்றார்கள்.

தொடர்க உங்கள் சேவை.