செவ்வாய், 27 ஜூலை, 2010

உலகத் தமிழினம் பற்றி பெருஞ்சித்திரனார்

உலகில் இன்று பரந்துபட்டு வாழும் இரண்டு பழம் பேரினங்களில் தமிழினமும் ஒன்று. மற்றொன்று சீன இனம். உலகில் இன்று வாழும் தமிழ் மக்களின் மொத்த மதிப்பீடு ஏறத்தாழ பதினேழு கோடியாகும். சீன நாட்டில்சீ-மோ-லா”(TCHI-MO-LO) என்ற மொழி பேசும் தமிழின மக்கள் ஏறத்தாழ நாலரைக் கோடியாகும் என்றும் பிரன்னீசு மலை நாடு, செருமனி, பிரான்சு, போர்த்துகல், இத்தாலி ஆகிய நாடுகளில்தாமோர்மொழி பேசும் தமிழின மக்கள் ஏறத்தாழ மூன்றரைக் கோடி பேராகும் என்றும், எகிப்தில் தொமூர் என்ற மொழி பேசும் தமிழின மக்கள் ஏறத்தாழ இரண்டரைக் கோடிப்பேர் என்றும் அறிஞர்கள் கூறுவர். சீ-மோ-லா, தாமோர், தொமூர் என்னும் பீயர்கள் தமிழ் என்னும் திரிபு மொழிகளாகும்.


தமிழ் என்னும் சொல் எங்ஙனம் வேத ஆரியர்களிடையே த்ரமுள் என்று திரிக்கப் பெற்று த்தரமிளம், திரவிடம் என உருமாறி வழங்கியதோ, அங்ஙனமே அச்சொல் பல்வேறு நாடுகளில் பலவேறு வடிவங்களாகத் திரிபுற்றும், கலப்புற்றும், சிதைவுற்றும் மாறியும் வழங்குகின்றது. கிரேத்தா தீவில் தெர்மிலர் என்னும் தீபெத்தில் திரமிலர் என்றும் தமிழர் அழைக்கப்பெறுகின்றனர். மற்றும் தமிழ் மொழியும் தாமிட , தமுர், தாமாலி, தமார், தமிர், துமா, தொமிட, தெமலிக், தாமுரி, தாமல் முதலிய பெயர்களாகப் பல்வேறு நாடுகளில் வழங்கப்பெறுகின்றன.


மலேசியா, ஈழம், சிங்கப்பூர், அந்தமான், பர்மா, பிசி, பிரான்சு, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா முதலிய நாடுகளில் நகர்ப்புறங்களில் கலப்பில்லாமல் இங்கிருந்து பலவகைப் பணிகள் தொடர்பாகப் போய் வாழும் தமிழின மக்கள்தாம் தம்மைத் தமிழர்கள் என்றும், தாம் பேசும் தாய்மொழியைத் தமிழ் என்றும் சிதைவில்லாமல் கூறி வருகின்றனர். தமிழீழமாகிய யாழ்பாணத்தில் வாழும் தமிழினமும் தமிழும் பெயரிலும் வழக்கிலும் திரிபில்லாமல் இருப்பதற்குக் கரணியம், அங்குத் தமிழர் நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே வாழ்ந்து வருவதுதான். மற்றபடி ஆத்திரேலியா, இந்தோனேசியா, மொரிசீயசு முதலிய நாடுகளில் கூட தமிழினப் பெயரும் தமிழ் மொழிப் பெயரும் ஓரளவு சிதைந்தும் பெருவாரியாக வழக்கிழந்தும் போய்விட்டன. உலகில் தமிழினம் வாழும் வேறு நாடுகள் திபெத்து, பெலுச்சித்தானாம், ஆப்கானிஸ்தான், மெக்சிகோ, கானா, கம்போடியா, சயாம், மார்த்தினிக்கு, மோரித்டீவு, பிரிட்டிசு, குவைத்து, தென் அமெரிக்கா , சப்பான், உகாண்டா முதலியன.


உலகின் ஏறத்தாழ நாற்பத்து நான்கு நாடுகளில் தமிழினம் வாழ்கிறது. அங்கெல்லாம் தமிழ்மொழி கலப்புற்றும், சிதைந்தும், திரிந்தும் வழங்கப்பெறுகின்றது. சில நாடுகளில் தமிழினம் பழங்குடி மக்களாகவே வாழ்ந்து வருகின்றனர். சிலவிடங்களில் திருந்திய மக்களாக நாகரீகமுற்ற மக்களாக, ஆனால் பிரஞ்சு, ஆங்கிலம் முதலிய மொழிகள் பேசும் மக்களாக வாழ்கின்றனர். உருசிய நாட்டில் ஏறத்தாழ முப்பது இலக்கம் மக்கள் வாழ்வதாக கணக்கிடப்பெற்றுள்ளது. அவர்கள் சி-மோ-லா என்னும் திரிந்த மொழியைப் பேசி வருகின்றனர் என்னும் கூறப்பெறுகிறது.


  • தென்மொழி பெருஞ்சித்திரனார்

கருத்துகள் இல்லை: