வியாழன், 18 செப்டம்பர், 2008

தமிழ்த் தெளிவு

தமிழ்த்தெளிவு 1

ஐயம் : ஐயா சிலர் “திரு” எனும் சொல்லைச் “ஸ்ரீ”
என்கிறார்களே சரியா?

தெளிவு : திரு எனும் அருந்தமிழ்ச் சொல்லைச் சொல்ல
முடியாமல் சமற்கிருத மொழியில் ஸ்ரீ என்றனர்.
திரு> ச்ரு> ச்ரி> ஸ்ரீ என்று சமற்கிருதத்தில் திரிந்தது. தமிழில்

திருவைத்தான் பயன்படுத்த வேண்டுமேயொழிய ஸ்ரீ யைப்
பயன்படுத்தக்கூடாது. தமிழிலும் ஸ்ரீ என்றுதான் சொல்ல வேண்டும்
என்று யாராவது கூறினால் அது மூடத்தனம்.


நன்றி :- தமிழ்நெறி

2 கருத்துகள்:

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

வணக்கம் கோவி.மதிவரன்.

தங்களின் தமிழ் ஆலயம் வலைப்பதிவைக் கண்டேன். வலையுலகத்தில் புதிதாக இணைந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

என்னுடைய 'திருமன்றில்' திரட்டியில் தங்களின் வலைப்பதிவை இடம்பெறச் செய்துள்ளேன். பார்க்கவும்.

தமிழ்த் தெளிவு இடுகை நன்று. பயனான தெளிவு. இதே கேள்வி பதில் அமைப்பில் இன்னும் இடுகைகள் தொடர்ந்து வரும் என எதிர்பார்க்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

தங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. தொடர்ந்து எழுத எண்ணம் உள்ளது இறைவன் திருவருள் புரிவானாக.
அன்புடன் கோவி.மதிவரன்