
நன்றி:- மலேசியத் தமிழ்நெறிக் கழகம்

நன்றி:- மலேசியத் தமிழ்நெறிக் கழகம்
1989-ஆம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப்பெரிய நிகழ்வாகத் தமிழீழ மாவீரர் நாள் தமிழீழ மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும்,தமிழீழம் மாவீரர் நாளைக் கடைப்பிடிப்பதற்கும் பெரும் வேறுபாடுகளுண்டு. ஏனைய நாடுகளிலெல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழா எடுக்கப்படுகின்றனவே தவிர, போராட்டம் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் காலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதில்லை. ஆனால்,விடுதலைப் போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும், எதிரியின் அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கிடையிலும், பல்வேறு நெருக்கடிக்களுக்கிடையிலும் போராட்டத்தையும் நடத்திக் கொண்டு தமிழ்மக்கள் மண்ணின் விடிவுக்காகத் தம் இன்னுயிரை ஈய்ந்த மாவீரர்களை எழுச்சியோடு நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இன்று நவம்பர் 25 மலேசிய தமிழர் வரலாற்றில் ம்றக்க முடியாத, நாள். மலேசியத் தமிழனின் குரல் உலகெங்கும் ஒலித்த ஒற்றுமைத்திருநாள். அதன் நினைவாக இக்கட்டுரை எழுதப்படுகிறது
“கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர் செய் கேட்டினுக்கும்
அஞ்சுவதில்லை; மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவதில்லை,; எனவே தமிழர் தோளெழுந்தால்
எஞ்சுவதில்லை உலகில் எவரும் எதிர்நின்றே!
உலக மக்களின் ஒட்டுமொத்த பார்வையையும் ஈர்த்த வரலாற்றுப் பொன்னாள் நவம்பர் 25 .
பழங்கால மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்க்கை நடத்திய போது இயற்கையிடம் மனிதன் தானாகக் கற்றது அல்லது தெரிந்து கொண்டது ஏராளம். அவ்வகையில் வந்ததுதான் கோலக்கலை.கோலம் என்றால் அழகு,ஒப்பனை எனப் பொருள்படுகிறது. எழுத்துகள் வருவதற்கு முன்னரே கோடுகள், குறியீடுகள் இருந்தன என வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர். தொடக்கத்தில் மனிதன் வெறும் கோடுகளைப் போட்டிருக்கின்றான்.பிறகுதான் அவற்றை வளைத்துக் கோலமாக இட்டிருக்கின்றான்.தொடக்கத்தில் மாட்டு தொழுவத்தில் சாணத்தால் மெழுகிய பகுதிகளில் பூச்சிப்பொட்டுகள் வராமலிருப்பதையும் கவனித்தவர்கள் வீட்டினுள்ளே இம்முறையைப் பயன்படுத்தினர். பின்னர் அதுவே கோலமாக மாறியிருக்கிறது. இயற்கையிடம் இருந்து பலவற்றை அறியும் அறிவைக்கொண்ட மனிதனின் கலை உணர்வின் வெளிப்பாடுதான் கோலம். அது தொடக்கத்தில் வாசல் கோலமாக தொடங்கியிருக்கிறது. மேலும் மண்ணில் ஊறும் உயிரினங்களுக்கு உணவாக ஆகும் என்பதால் அரிசிப் பொடியில் கோலம் போடப்பட்டிருக்கிறது.
கோலம் வரைகிற பண்பாட்டு நடைமுறையில் கூட நுண்ணுயிர்களின் பசிப்போக்குகின்ற உயர்ந்த பண்பாட்டை அக்காலத்தமிழர் கொண்டிருந்தனர் என்பது வியப்பானதுதான்? ஆனால், இன்று நாகரிகம் என்ற உணர்வில் உண்பதற்கு உதவாத வேறுவகை(கற்களின்) பொடிகளில் கோலம் இடுதல், பழந்தமிழர் கோலப் பண்பாட்டை உள்வாங்கவில்லை என்று பொருள்படுகிறது.
தாம் வாழ்ந்த காலத்தில் பேசிய பேச்சாலும் எழுதிய எழுத்தாலும் ஆற்றிய செயலாலும் தமக்குப் பின்னும் சமுதாயத்தில் மிக நல்ல விளைவுகளை ஏற்படுத்தி நாம் மீண்டும்-மீண்டும் நினைக்கத்தக்க வகையில் உயர்ந்த பயன்களை வழங்கிய பெரிய மனிதர்களைத் தான் நாம் சான்றோர்கள் என்றும் ஞானிகள் என்றும் சித்தர்கள் என்றும் மதித்துப் போற்றிக் குறிப்பிடுகின்றோம். அவ்வகையில் மிக அண்மைய காலத்தில் தமிழ்ச்சமயத்தில் தோன்றி அளப்பரிய பங்கினை ஆற்றியவர்தான் திருவருட் பேரொளி இராமலிங்க வள்ளலார். உலகம் ஏற்றுக் கொள்ளக்கூடிய உயரிய ஒரு பொதுக் கருத்து ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை என்பதாகும். உலக உயிர்கள் எல்லாம் ஒன்று. அவ்வுயிர்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதே வள்ளல் பெருமானார் வழி. 

பேரா மாநில மன்னர் வழி குறிஞ்சிக்குமரனாரின் தனித்தமிழ்ப் பணி “தமிழ்ச்செல்வர்” என்ற விருதைப் பொற்பதக்கத்தில் வழங்கியது சிறப்புக்குரிய ஒன்றாகும். பாவலர் அவர்களின் அயராத தமிழ்ப்பணியின் காரணமாக 1971-ஆம் ஆண்டு பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் “சித்த மருத்துவர் செந்தமிழ்ப்ப்புலவர்” என்ற சீரிய விருதை வழங்கிச் சிறப்பித்தார். 1971-ஆம் ஆண்டு பத்துகாஜா பாரதியார் படிப்பகத்தினர் “பாவலர் செந்தமிழ்க்குறிஞ்சி” என்ற விருதை வழங்கினர். மேலும் 1976-ஆம் ஆண்டு “செந்தமிழ்க்கவிமணி” என்ற விருதையும் 1989-ஆம் ஆண்டு பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் தலைமையில் மலேசியத் திராவிடர் கழகம் “தமிழனல்” என்ற விருதை வழங்கிச் சிறப்பித்தனர்.
செலாமாவில் உள்ள தமிழ் நெறிக்கழகத்தின் ஏடலராகவும் இருந்து இனம், மொழி, குமுகாய மறுமலர்ச்சி உணர்வுடன் பல்லாற்றானும் பாடாற்றி வந்தவர் குறிஞ்சியார் அவர்கள். ஐயா அவர்கள் “பாண்டியத் தலைவன்” “கோமான் குமணன்” போன்ற இலக்கிய நாடகங்களை எழுதியும் பல மாநாடுகளிலும் கருத்தரங்குகளிலும் கலந்து கட்டுரை படைத்துள்ளார். சித்த மருத்துவத்தில் சிறந்த தேர்ச்சிப் பெற்ற இவர் அதனையே தனது தொழிலாக நடத்தி வந்தார். அன்னவர் பல்வேறு மருந்துகளுக்கு தனித்தமிழ்ப் பெயர்களையே வைத்திருந்தது தனிச்சிறப்பாகும்.
மலேசியத் தனித்தமிழ் வளர்ச்சிக்கு தன் வாழ்நாள் முழுவதும் ஈகப்படுத்தி பணியாற்றிய முதுபெரும் பாவலர் சா.சி.குறிஞ்சிக்குமரனார் அவர்கள் 18.10.1997-இல் விடியற்காலை 5.55க்கு மீளாத் துயில் கொண்டார். இவர் மறைந்தாலும் இவரின் தனித்தமிழ்க் கொள்கை இன்றும் மலேசியத் தமிழர்களிடையே வேரூன்றி இருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.
ஆக்கம்;
நல்லார்கினியனார்
செ.சீனி நைனா முகம்மது